UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM
ADDED : ஜூன் 27, 2023 09:38 AM
கரூர்:
கரூரில் நடந்த, மாநில அளவிலான வாலிபால் இறுதி போட்டியில், கோவை கற்பகம் கல்லுாரி அணி வெற்றி பெற்றது.கரூர் மாவட்ட வாலிபால் சங்கம், கரூர் ரோட்டராக்ட் கிளப் சார்பில், மாநில அளவிலான ஆண்களுக்கான வாலிபால் போட்டி, திருவள்ளுவர் மைதானத்தில் கடந்த 23ல் தொடங்கியது. லீக் அவுட் முறையில் நடந்த போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் கோவை கற்பகம் கல்லுாரி அணியும், பொள்ளாச்சி எஸ்.டி.சி., கல்லுாரி அணிகளும் மோதின. அதில் கோவை கற்பகம் கல்லுாரி அணி 25-22, 25-22 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது இடத்தை சென்னை வைஷ்ணவ் கல்லுாரி அணியும், நான்காவது இடத்தை சென்னை செயின்ட் ஜோசப் அணியும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, ஏ.டி.எஸ்.பி., மோகன் பரிசு தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் கமாலுதீன், ஆலோசகர் சுரேஷ், தொழில் அதிபர்கள் கருப்பண்ணன், தனபதி உள்பட பலர் பங்கேற்றனர்.
