தினமலர் வழிகாட்டி : தேனி, சிவகாசி, மதுரையில் நடக்கிறது
தினமலர் வழிகாட்டி : தேனி, சிவகாசி, மதுரையில் நடக்கிறது
UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM
ADDED : ஜூன் 28, 2023 04:13 AM
தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்காக காத்திருக்கின்றனர். அவர்களின் ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு அளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்தாண்டு ஜூலை 1ல் தேனி அன்னப்பராஜா கல்யாண மகாலில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் கவுன்சிலிங்கில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறை குறித்து தமிழ்நாடு இன்ஜினியரிங் சேர்க்கை முன்னாள் செயலர் ரைமண்ட் உத்தரியராஜ், வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள் என்ற தலைப்பில் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி ஆகியோர் பேசுகின்றனர்.ஜூலை 2ல் சிவகாசி, மதுரையில்
ஜூலை 2ல் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை சிவகாசி எஸ்.எப்.ஆர்., கல்லுாரியில் நடக்கும் வழிகாட்டி நிகழ்ச்சியிலும், மதியம் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடக்கும் வழிகாட்டி நிகழ்ச்சியிலும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் தலைப்பில் சென்னை அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன், வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள் என்ற தலைப்பில் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி ஆகியோர் பேசுகின்றனர். இக்கலந்தாய்வில் ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறை என்ன, கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன, வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் துறைகள் எவை, எந்த கட்ஆப்க்கு எந்த கல்லுாரி சாத்தியம் என்று மாணவர்கள், பெற்றோருக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் நிபுணர்கள் நேரடி விளக்கம் அளிக்கின்றனர். மாணவர்கள் பங்கேற்க www.kalvimalar.com அல்லது 91505 74441 ல் முன்பதிவு செய்யலாம். அனுமதி இலவசம். இந்நிகழ்ச்சியை கோவை கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து வழங்குகிறது.
