தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குழந்தை தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

குழந்தை தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

குழந்தை தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்


UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM

ADDED : ஜூன் 28, 2023 09:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM ADDED : ஜூன் 28, 2023 09:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு: 
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையினர் நடத்திய பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் 3,573 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 1,737 குழந்தைகள் மீட்கப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்து தொழிலாளர்களாக உள்ள குழந்தைகளை கண்டறிந்து மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை மூலம், மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களில் 6 முதல் 18 வயது வரையிலான பள்ளி செல்லா, இடைநின்ற, புலம் பெயர்ந்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நடந்தது. இந்த கணக்கெடுப்பு பணியில் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.இதில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட 89 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டும் பள்ளி செல்லா குழந்தைகளை கண்காணிக்க பள்ளி மற்றும் வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களை மேற்பார்வையிட செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாதத்திற்கு ஒருமுறை, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்பட்ட விபரங்கள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும். கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட குழந்தைகளை உடனுக்குடன் பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய 6 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பள்ளியில் சேர்க்க வயது இருந்தும் இதுவரை பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. செங்கல் சூளைகள், கட்டுமானப் பணியிடங்கள், அரிசி ஆலைகள், குவாரிகள், தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் பணிபுரிய, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் புலம் பெயர்ந்து வரும் குழந்தைகளை விரைவில் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக, பேருந்து நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட், சுற்றுலா தளங்கள், செங்கல் சூளைகள், கடைகள், இருளர் குடியிருப்பு, நரிக்குறவர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில், திடீர் சொதனை நடத்தப்பட்டு, பள்ளி செல்லா குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி, கடந்த மே மாதம் துவங்கி நடந்து வருகிறது. இதில், 3,573 குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.அதில் 1,737 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 1,836 மாணவர்களையும் கண்டுபிடித்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சென்ற கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில், 2,708 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அவர்களின் இடை நிற்றலை தடுக்கும் வகையில், மீண்டும் அவர்களை தேர்வு எழுத வைத்து, பள்ளி மற்றும் ஐ.டி.ஐ.,களில் சேர்க்கும் நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, 1,737 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில், கண்காணிப்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர், என செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை கல்வித்துறை அதிகாரி, தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us