UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM
ADDED : ஜூன் 28, 2023 09:49 AM
தேனி:
தேனி மாவட்டத்தில் 15 பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வுகள் நேற்று துவங்கியது. இதில் 1150 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வில் 242பேர் ஆப்சென்ட் ஆகினர்.பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் மார்ச்சிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடந்தது. இத்தேர்வுகளில் ஆப்சென்ட் ஆனவர்கள், தேர்ச்சி அடையாதவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பிளஸ் 1, 10ம் வகுப்பு தேர்வுகள் துவங்கியது. தேனி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வுகள் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் பகுதிகளில் 7 தேர்வு மையங்களில் மொழிப்பாடத் தேர்வு நடந்தது. தேர்வு எழுத 536 விண்ணப்பித்திருந்த நிலையில் 398 பேர் பங்கேற்றனர். 138 பேர் ஆப்சென்ட் ஆகினர். அதே போல் 10ம் வகுப்பு தேர்வு மாவட்டத்தில் 8 மையங்களில் நடந்தது. பங்கேற்க 856 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வில் 752பேர் பங்கேற்றனர்,104 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
