தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளுக்கு எச்சரிக்கை

அரசு பள்ளிகளுக்கு எச்சரிக்கை

அரசு பள்ளிகளுக்கு எச்சரிக்கை


UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM

ADDED : ஜூன் 28, 2023 03:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM ADDED : ஜூன் 28, 2023 03:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரிடம் நன்கொடை வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, அரசின் சார்பில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படுன்றன. இந்த பள்ளிகளின் மாணவர்களுக்கு அரசின் அனைத்து இலவச நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் எந்த கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் எதுவுமின்றி அரசு பள்ளிகளில் மாணவர்கள் படிக்கின்றனர். அதேநேரம் பல அரசு பள்ளிகளில் குறிப்பாக மாதிரி மேல்நிலை பள்ளிகள், சீர்மிகு பள்ளிகள் உள்ளிட்டவற்றில், மாணவர் சேர்க்கையின்போது பெற்றோரிடம் கட்டாய நன்கொடை பெறுவதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பல மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சென்னையில் நேற்று நடந்த கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் மாணவர் சேர்க்கை குறித்த வழிமுறைகளை பள்ளிக்கல்வி இயக்குனர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதில் எந்த பள்ளியிலும் மாணவர் சேர்க்கைக்கு கட்டாய நன்கொடை வசூலிக்கக்கூடாது. அவ்வாறு வசூலிப்பது தெரியவந்தால் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us