UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM
ADDED : ஜூன் 28, 2023 04:31 PM
தொண்டாமுத்துார்:
திருப்பூரில் நடந்த மாநில அளவிலான களரி போட்டியில், ஈஷா சமஸ்கிருதி மாணவர்கள், 23 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.பாரத தேசத்தின் தற்காப்பு கலைகளில் ஒன்றாக களரி பயட்டு உள்ளது. களரி பயட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு களரி பயட்டு சங்கம் சார்பில், மாநில அளவிலான களரி போட்டி, திருப்பூரில் நடந்தது; கோவை, திருப்பூர், சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கோவையில் இருந்து ஈஷா சமஸ்கிருதி மாணவர்கள், மெய்பயட்டு, சுவாடுகள், உருமி, ஹை கிக், ஸ்வார்ட் அண்ட் சீல்டு ஆகிய ஐந்து பிரிவுகளில் கலந்துகொண்டு 7 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம் என 23 பதக்கங்களை வென்று அசத்தினர். இதில் ஸ்ரீனிவாசன், தமோஹரா, த்யான், அதிரா, ஈஷா, சுவாமி மஹன்யாஸ், சுவாமி மிதுன் ஆகிய மாணவர்கள் தங்கப்பதக்கங்களை வென்றனர். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்.பி., சண்முகசுந்தரம் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
