தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் வழிகாட்டி 1ம் தேதி சென்னையில் நடக்கிறது

தினமலர் வழிகாட்டி 1ம் தேதி சென்னையில் நடக்கிறது

தினமலர் வழிகாட்டி 1ம் தேதி சென்னையில் நடக்கிறது


UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM

ADDED : ஜூன் 29, 2023 04:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM ADDED : ஜூன் 29, 2023 04:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக உயர்கல்வித் துறை சார்பில், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வழிகாட்டும் வகையில், தினமலர் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அப்ளைடு ரிசர்ச் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வரும் 1ம் தேதி சென்னையில் இரண்டு இடங்களில் வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில், அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை பிரிவு முன்னாள் இயக்குனர் நாகராஜன், இன்ஜினியரிங்கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து பேச உள்ளார். வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள் குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின், ஆலோசனை வழங்க உள்ளார்.கவுன்சிலிங்குக்கான நடைமுறைகள், எந்த கட் - ஆப் மதிப்பெண்ணுக்கு, எந்த பாடப்பிரிவு, எந்த கல்லுாரியில் கிடைக்கும்; மாணவர்கள் உயர்கல்வியில், வளர்த்து கொள்ள வேண்டிய திறன்கள் என்ன, கல்லுாரி மற்றும் பாடப்பிரிவில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பன குறித்து, நிபுணர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, எவ்வித கட்டணமும் இல்லை.நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், www.kalvimalar.com என்ற இணையதளம் அல்லது 91505 74441 என்ற மொபைல்போன் எண்ணில், தங்கள் விபரங்களை முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுஉள்ளது. குன்றத்துாரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் வரும் 1ம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 1:00 வரை நிகழ்ச்சி நடக்கிறது. அண்ணா நகர் மேற்கில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ.,ஜூனியர் கல்லுாரி வளாகத்தில் பிற்பகல் 3:00 மணி முதல் 6:00 மணி வரை வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us