தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ மாணவர்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்: அமைச்சர்

மருத்துவ மாணவர்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்: அமைச்சர்

மருத்துவ மாணவர்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்: அமைச்சர்


UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM

ADDED : ஜூன் 29, 2023 09:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM ADDED : ஜூன் 29, 2023 09:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனையின் இரண்டாவது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது; மருத்துவமனை டீன் ரவீந்திரன் வரவேற்றார். மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலர், எம்.பி., நடராஜன் முன்னிலை வகித்தனர்.தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் பேசுகையில், பட்டம் பெறும் உங்களை விட, உங்களது பெற்றோர் அதிக மகிழ்ச்சியில் இருப்பர். மருத்துவராவது ஒவ்வொருவரின் கனவு. மருத்துவக் கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவியபோது, மருத்துவ சேவையை திறம்பட வழங்கினீர்கள். அச்சமயத்தில் பல இன்னலை எதிர்கொண்ட நீங்கள் எதையும் சாதிப்பீர்கள், என்றார். இங்கு 101 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதேபோல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லுாரியில் நடந்த விழாவில், 148 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மருத்துவமனை டீன் நிர்மலா வரவேற்றார்.விழாவில், அமைச்சர் பேசுகையில், கோவை அரசு மருத்துவமனையில், தினமும் 5,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ மாணவர்களின் ஒத்துழைப்பும், சேவையும் முக்கிய காரணம். எதிர்காலத்தில் மருத்துவ மாணவர்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். மருத்துவ மாணவர்கள் சாதனை படைக்க நிறைய படிக்க வேண்டும்; தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், என்றார்.பெட்டகம் வழங்கும் திட்டம்
மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு தவிர்க்க, இருதய பாதுகாப்பு மருந்து வழங்கும் நிகழ்ச்சி, மலுமிச்சம்பட்டியில் உள்ள கிராமப்புற நல வாழ்வு மையத்தில் நடந்தது.இங்கு, அமைச்சர் சுப்ரமணியன் பேசுகையில், மக்களை தேடி மருத்துவ திட்டத்தில், இதுவரை ஒரு கோடியே, 60 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். மாரடைப்பால் இறப்பதை தவிர்க்க, மாநிலம் முழுவதும், 3.37 கோடி ரூபாயில் இருதய பாதுகாப்பு மருந்து பெட்டகம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. வரும் 10 நாட்களுக்குள் மாநிலம் முழுவதுமுள்ள 8 ஆயிரத்து 713 துணை சுகாதார நிலையங்கள், 2 ஆயிரத்து 286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இப்பெட்டகத்துடன், பாம்புக்கடிக்கான மருந்து இருக்கும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us