செய்தித்தாள்களை படிக்கவும்: சப் - கலெக்டர் அட்வைஸ்
செய்தித்தாள்களை படிக்கவும்: சப் - கலெக்டர் அட்வைஸ்
UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM
ADDED : ஜூன் 29, 2023 09:28 AM
பொள்ளாச்சி:
செய்தித்தாள்களை படித்து அரசின் திட்டங்களையும், பல்வேறு தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும், என சப் - கலெக்டர் தெரிவித்தார்.மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டல அலுவலகம் சார்பில், மூன்று நாட்கள் புகைப்பட கண்காட்சி, பொள்ளாச்சி ரோட்டரி ஹாலில் நடக்கிறது. மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச யோகா தினம், சர்வதே சிறுதானிய ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்து, மையக்கருத்துக்களை அடங்கியதாக கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் துவக்க விழாவில், தர்மபுரி மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம், கள விளம்பர அலுவலர் பிபின் எஸ் நாத் வரவேற்றார். கோவை, இந்திய தர நிர்ணயம் முதுநிலை இயக்குனர் விஞ்ஞானி கோபிநாத், கனரா வங்கி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார், கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பேசினர்.கண்காட்சியை துவக்கி வைத்து,பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா பேசியதாவது:
மத்திய,மாநில அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு, பெற்றோர், பொது மக்களிடம் தெரிவிக்கலாம். புகைப்பட கண்காட்சியை பார்த்து,மத்திய அரசின் நலத்திட்டங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.மாணவர்கள், செய்தித்தாள்களை தினமும் படிக்க வேண்டும். அதில் வரும் அரசின் திட்டங்கள், பல தகவல்களை படித்து பயன்பெறலாம்.இவ்வாறு பேசினார்.பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாளை (30ம் தேதி) வரை நடக்கும் கண்காட்சியை காலை 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை இலவசமாக காணலாம். இதற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு கள அலுவலர் தலைமையில், தொழில்நுட்ப உதவியாளர் சந்திரசேகரன், கள விளம்பர உதவி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
