தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அங்கீகாரம் நீட்டிப்பு! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

அங்கீகாரம் நீட்டிப்பு! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

அங்கீகாரம் நீட்டிப்பு! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்


UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM

ADDED : ஜூன் 29, 2023 09:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM ADDED : ஜூன் 29, 2023 09:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கும் ஐந்தாண்டுக்கு அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது, என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.கோவை அரசு மருத்துவமனையில் நடந்த பல்வேறு திட்டங்கள் துவக்க விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
அனைத்து துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும் இருதய பாதுகாப்புக்கான மருந்து இருப்பு வைக்கப்படும். கொரோனாவுக்குபின் மாரடைப்பு அதிகரித்துள்ளதால் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. விஷக்கடிக்கான சிகிச்சை, மருந்து கையாள்வது குறித்து, 30 ஆயிரம் நர்ஸ்களுக்கு பயிற்சி அளிக்கப்படும், தமிழகத்தில், 708 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் துவக்க திட்டமிடப்பட்டது; ஓராண்டில் 500 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 25 மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. புதிதாக 11 நர்சிங் பயிற்சி கல்லுாரிகள் துவங்கப்பட உள்ளன. தேசிய மருத்துவ கவுன்சில், மருத்துவக் கல்லுாரிகளில் வசதி குறைபாடுகளுக்காகமட்டும் நோட்டீஸ் வழங்கவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் திரும்பி இருந்ததை கூட குறையாக தெரிவித்து நோட்டீஸ் வழங்கியது. அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்பட்டு, 36 மருத்துவக் கல்லுாரிகளிலும் தேவையான வசதிகள் ஏற்படுத்தி, ஐந்தாண்டுகளுக்கு அங்கீகாரம் நீட்டிப்பு பெறப்பட்டுள்ளது.மருத்துவ துறையில் உள்ள 4,300 காலி பணியிடங்கள்நிரப்பப்படும். அதில் 1,021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்ப 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவு வெளிவந்ததும் 1,021 மருத்துவர்கள், 980 மருந்தாளுனர்களுக்கு ஒரே நாளில் பணி உத்தரவு வழங்கப்படும். கோவை அரசு மருத்துவமனையில் 26 அறைகளுடன் கூடிய கட்டண சிகிச்சை அறைகள் துவக்கப்பட்டுள்ளன. சாதாரண வார்டுக்கு ரூ.1,200 டீலக்ஸ்க்கு ரூ.2,000, சூப்பர்டீலக்ஸ்க்கு ரூ.3,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சிகளில், தேசிய சுகாதார குழும இயக்குனர் ஷில்பா, மருத்துவ கல்வி இயக்குனர் சாந்திமலர், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us