தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநகராட்சி பள்ளிக்கு ஆலோசகர்கள்

மாநகராட்சி பள்ளிக்கு ஆலோசகர்கள்

மாநகராட்சி பள்ளிக்கு ஆலோசகர்கள்


UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM

ADDED : ஜூன் 30, 2023 03:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM ADDED : ஜூன் 30, 2023 03:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பெங்களூரு மாநகராட்சி நிர்வகிக்கும் பள்ளி, கல்லுாரிகளின் தரத்தை உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக, கல்வித் துறையின் ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஆலோசகர்களாக நியமிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.பெங்களூரு மாநகராட்சி சார்பில் குழந்தைகள் காப்பகம், தொடக்க பள்ளி, உயர்நிலைப் பள்ளி, பி.யு.சி., கல்லுாரிகள், பட்டப்படிப்பு கல்லுாரிகள், முதுகலை பட்டப்படிப்பு கல்லுாரிகள் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளி, கல்லுாரிகளில் ஏழை, நடுத்தர வர்க்கத்து குடும்பங்களின் மாணவர்கள், அதிகமாக படிக்கின்றனர். கொரோனா தொற்று பரவிய பின் மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, 17 ஆயிரத்தில் இருந்து, 23 ஆயிரமாக அதிகரித்துள்ளது. எனவே தன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி, கல்லுாரிகளில் கல்வித்தரத்தை அதிகரிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக கல்வி ஆலோசகர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது.மாநகராட்சி கல்வித்துறை துணை கமிஷனர் வெங்கடராஜு கூறியதாவது:
மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் கல்வித் தரத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி, கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்படும். கல்வி மேம்பாட்டுக்கு கல்வித் துறையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆலோசகராக நியமிக்கப்படுவர். மாநகராட்சி கல்விப்பிரிவு ஏற்கனவே விண்ணப்பம் வரவேற்று, நேர்முக தேர்வு நடத்தியுள்ளது. இன்னும் ஆலோசகர்களை நியமிக்கவில்லை. மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் பணியாற்றி அனுபவம் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நியமிக்கப்படும் ஆலோசகர்கள், கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பர். இவர்களின் உதவியுடன் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் இரண்டாம் ஆண்டு பி.யு.சி.,யில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கப்படும். நடப்பு கல்வியாண்டில் இன்று வரை மாணவர் சேர்க்கைக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us