தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குன்றத்துார், அண்ணா நகரில் நாளை தினமலர் வழிகாட்டி

குன்றத்துார், அண்ணா நகரில் நாளை தினமலர் வழிகாட்டி

குன்றத்துார், அண்ணா நகரில் நாளை தினமலர் வழிகாட்டி


UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM

ADDED : ஜூன் 30, 2023 03:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM ADDED : ஜூன் 30, 2023 03:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக உயர் கல்வி துறையின் சார்பில், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில் மாணவர்கள் பங்கேற்று, தங்களின் விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கு வழிகாட்டும், தினமலர் நாளிதழ் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னையில் இரண்டு இடங்களில் நாளை நடக்கிறது. குன்றத்துாரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கேம்பஸ் கல்லுாரியில், நாளை காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, காலை, 9:00 மணிக்கு, குன்றத்துார் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, அண்ணா நகர் மேற்கு விரிவு பகுதியில் உள்ள, எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரியில், மாலை, 3:00 மணி முதல் 6:00 மணி வரை நடக்க உள்ளது. இதில், ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் முறை, சிறந்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்தல், கட் - ஆப் மதிப்பெண்ணின் முக்கியத்துவம், வாய்ப்பு மிகுந்த துறைகள், வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து, அண்ணா பல்கலை முன்னாள் இயக்குனர் நாகராஜன், கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர் விளக்குகின்றனர். நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர் இலவசமாக பங்கேற்கலாம். www.kalvimalar.com என்ற இணையதளத்தில், தங்கள் பெயர் உள்ளிட்ட விபரங்களை முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us