தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம்: என்.ஐ.ஆர்.எப்

தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம்: என்.ஐ.ஆர்.எப்

தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம்: என்.ஐ.ஆர்.எப்


UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM

ADDED : ஜூன் 30, 2023 04:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM ADDED : ஜூன் 30, 2023 04:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுமார் 3000 கல்லூரிகளுக்கு மேலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஐந்து முக்கிய கூறுகளை கொண்டு தரவரிசை வழங்கப்பட்டுள்ளன. அதாவது, கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள் (40%), பட்டப்படிப்பு முடிவுகள் (25%), ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை நடைமுறைகள் (15%), கற்றல் சென்று சேரும் திறன் (10%) மற்றும் அறிவுத்திறன் (10%) ஆகிய 5 கூறுகளை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.அதில் முதல் 100 இடங்களில் தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்த தரவரிசையில் 100ல் தமிழகத்தின் 18 கல்வி நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் சென்னை ஐ.ஐ.டி முதலிடத்தை பிடித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் தமிழகத்தின் 22 பல்கலை.,கள் இடம்பெற்றுள்ளன. 100 சிறந்த கல்லூரிகளில், தமிழகத்தில் இருந்து 35 கல்லூரிகளும், டில்லியில் இருந்து 32 கல்லூரிகளும், கேரளாவில் இருந்து 14 கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன. மற்ற மாநிலங்கள் அனைத்தையும் சேர்த்து 19 கல்லூரிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.அதேபோல், இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தரவரிசையில் தமிழகத்தில் உள்ள 15 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. மருத்துவ கல்லூரிகளில் தமிழகத்தின் 8 மருத்துவக் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. இப்படி, மேலாண்மை, ஆராய்ச்சி நிறுவனங்கள், பார்மஸி, சட்டம் போன்ற படிப்புகளிலும் சிறந்த கல்லூரிகளில் தமிழகத்தின் பங்கு அதிகமாக உள்ளது.சிறந்த கல்லூரிகள் பட்டியலில் இடம்பெற்ற 35 தமிழக கல்லூரிகளில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களை சேர்ந்த 12 கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன. இது தமிழகத்தில் கல்வி மற்றும் கல்வி கற்கும் அளவுக்கான பொருளாதார பின்னணி பரவலாக காணப்படுவதையே காட்டுகிறது. இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us