UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM
ADDED : ஜூன் 30, 2023 11:38 AM
அ நிறம் | அளவு
கடலுார்:
கடலுார் அரசு கல்லுாரியில்ஒரே நாளில் கலந்தாய்வு நடத்த வேண்டுமென மாநகராட்சி துணை மேயர் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், கடலுார் அரசுக் கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சாந்தி ராமகிருஷ்ணனிடம் அளித்த மனு:
அரசுக் கல்லுாரியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான நிரப்பப்படாத இடங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மாணவர்களுக்கு சரிசமமாக பகிர்ந்தளிக்க வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒரே நாளில் கலந்தாய்வு நடத்த வேண்டும். தமிழக அரசு உத்தரவின்படி, கூடுதலாக 20 சதவீத சீட்டுகளை அதிகரித்து ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும்.
