UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM
ADDED : ஜூன் 30, 2023 11:43 AM
சிவகாசி:
செவிலியர் பணி சுகாதாரத் துறை சார்ந்த தொழிலாக உள்ளது. செவிலியர் என்பது தன்னலம் பார்க்காமல் நோயாளிகளுக்கு சேவை செய்யும் மனப்பான்மை உடன் உள்ளவர்கள் மட்டுமே ஈடுபடும் ஒரு துறை. அத்துறையில் சிவகாசியில் சிறந்த முறையில் பயிற்றுவித்து வருகிறது அருணா செவிலியர் பயிற்சி கல்லுாரி.ரோக்கியம் பராமரிப்பு நோயாளி அணுகுமுறை பராமரிப்பு பயிற்சி செவிலியர்கள் நடைமுறையில் உள்ள வரம்புகள் என பல மாறுபட்ட நிலைகளில் செவிலியர்கள் உள்ளனர். செவிலியர்களுக்காக சிவகாசி பஸ் நிலையம் எதிரில் அருணா செவிலியர் உதவியாளர்கள் பயிற்சி நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்களது சிறப்பு அம்சங்கள், படிக்கும்போதே உதவித்தொகை முறையான சிறந்த பயிற்சி திறமையான தகுதியான ஆசிரியர் குழு மருத்துவம் சார்ந்த அனைத்து துறைகளிலும் சிறப்பு பயிற்சி உடனடி வேலை வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இன்றைய மருத்துவ உலகம் புதிய கண்டுபிடிப்புகளுடன் மிகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் எண்ணிக்கையும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருக்கும் வேகத்திற்கு செவிலியர் துறை வளர்ச்சி இன்னும் தேவைப்படுகிறது. அருணா குழந்தைகள் மருத்துவமனையின் சார்பில் அனைத்து மருத்துவ துறை சம்பந்தப்பட்டவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் விதமாக அருணா அலைடு ஹெல்த் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கப்பட்டு திறம்பட நடத்தப்பட்டு வருகிறது, என டாக்டர் ராமநாதன் கூறினார்.
