தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்.,

பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்.,

பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்.,


UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM

ADDED : ஜூலை 01, 2023 09:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM ADDED : ஜூலை 01, 2023 09:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், மத்திய அரசின், சமக்ர சிக் ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகையில், எமிஸ் என்ற கல்வி மேலாண்மை தளத்தில், மாணவ - மாணவியரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட மாணவர்களின் மொபைல் போன் எண்களுக்கு, பள்ளிகளில் இருந்து பல்வேறு வகை தகவல்கள், எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்படுகின்றன. அனைத்து அரசு பள்ளிகளிலும், தினமும் வருகைப் பதிவு முடிந்ததும், அன்றைய தினம் வராத மாணவர்கள் குறித்து பட்டியல் எடுத்து, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, வாட்ஸாப் மற்றும் வருகைப்பதிவு செயலி வழியே தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல் ஆப்சென்ட் மாணவர்களின் பெற்றோரின் மொபைல் போன் எண்ணுக்கு, தமிழில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்றும், தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டு உள்ளனர். இந்த குறுஞ்செய்தியின் வழியே பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு வந்திருக்கின்றனரா என்ற விபரத்தை தெரிந்து கொள்ள முடியும். அதேபோல் மாணவர்களும் வேறு எங்கும் செல்வதற்கு பதில் ஒழுங்காக தினமும் பள்ளிக்கு வர மொபைல் போன் குறுஞ்செய்தி எச்சரிக்கையாக அமையும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us