தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுயநிதி மழலையர், தொடக்கப்பள்ளி சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

சுயநிதி மழலையர், தொடக்கப்பள்ளி சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

சுயநிதி மழலையர், தொடக்கப்பள்ளி சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்


UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM

ADDED : ஜூலை 01, 2023 05:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2023 12:00 AM ADDED : ஜூலை 01, 2023 05:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
நாமக்கல்லில், சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.நிறுவனர் சுப்பய்யன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் திருவின்மணாளன், மாவட்ட செயலர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கட்டட உறுதி சான்று, உரிமம் சான்று, தீ தடையின்மை சான்று, சுகாதார சான்று ஆகிய சான்றுகள் இருந்தாலே போதுமானதாக கருதி, ஆர்.சி.சி.,கட்டடம், ஓட்டு கட்டடம், அட்டை கட்டடம் என பாகுபாடு பார்க்காமல், மற்ற வகை சான்றுகளை கட்டாயப்படுத்தாமல், தொடர் அங்கீகாரம் நிலுவையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், 2023 மே 31 வரை உடனடியாக தொடர் அங்கீகாரம் புதுப்பித்து வழங்க வேண்டும்.நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு டி.டி.சி.பி., கட்டாயப்படுத்தாமல், 3 கிரவுண்டு இடம் தேவை என்பதை தளர்த்தி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கும் இடத்தை எடுத்துக்கொண்டு தொடர் அங்கீகாரம் புதுப்பித்து வழங்க வேண்டும். குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு அறக்கட்டளை நிதி, 1 லட்சம் ரூபாய் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us