தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல்வர் கோப்பை போட்டிகள் 27,000 பேருடன் துவக்கம்

முதல்வர் கோப்பை போட்டிகள் 27,000 பேருடன் துவக்கம்

முதல்வர் கோப்பை போட்டிகள் 27,000 பேருடன் துவக்கம்


UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM

ADDED : ஜூலை 02, 2023 07:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM ADDED : ஜூலை 02, 2023 07:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் கபடி, சிலம்பம் உள்ளிட்ட, 15 விளையாட்டுகளுடன் பள்ளி, கல்லுாரி, பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளில், 3.75 லட்சம் பேர் பங்கேற்ற முதல்வர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல போட்டிகள் ஏற்கனவே நடந்து உள்ளன.அவற்றில் முதலிடம் பிடித்த, 27,000 பேருக்கான மாநில போட்டிகள் துவங்கி, வரும் 25ம் தேதி வரை சென்னையின் பல இடங்களில் நடக்கின்றன. இதன் துவக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. அதில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையரின் அணிவகுப்பை தொடர்ந்து, ஒலிம்பிக் தடகள வீராங்கனை ரேவதி மற்றும் உலக வாலிபால் வீரர் வைஷ்ணவ் ஆகியோர், முதல்வர் கோப்பை சுடரை ஏந்தி வர, அதை, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வாங்கி, தீபத்தை ஏற்றி வைத்தார். ஒலிம்பிக் வீராங்கனை சுபா வெங்கடேசன், ஊக்கமருந்து இல்லாத, நேர்மையாக போட்டிகளில் பங்கேற்கும் வகையில், வீரர்களின் சார்பில் உறுதிமொழி ஏற்றார்.முதல்வர் கோப்பையை அறிமுகம் செய்து, போட்டிகளை துவக்கி வைத்த பின், அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
முதல்வர் கோப்பை போட்டிகளில் முதல் பரிசாக 50,000 - 1 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 37,000 - 75,000 ரூபாய், மூன்றாம் பரிசாக, 25,000 - 50,000 ரூபாய் வரை வழங்கப்பட உள்ளது. வெற்றி பெறுவோரை, நிறைவு விழாவில் முதல்வர் கவுரவிக்க உள்ளார். இதில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனையர், பயிற்சியாளர்களுக்கு நட்சத்திர விடுதிகளில் உணவு, தங்குமிடம், விளையாட்டு நடக்கும் இடத்துக்கான போக்குவரத்து வசதிகளை அரசே செய்ய உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us