தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்கள் ஓய்வூதியம் ஐகோர்ட் உத்தரவு

ஆசிரியர்கள் ஓய்வூதியம் ஐகோர்ட் உத்தரவு

ஆசிரியர்கள் ஓய்வூதியம் ஐகோர்ட் உத்தரவு


UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM

ADDED : ஜூலை 02, 2023 07:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM ADDED : ஜூலை 02, 2023 07:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 
தொழில் கல்வி ஆசிரியர்களின் தற்காலிக பணி காலத்தில், 50 சதவீதத்தை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் தாக்கல் செய்த மனு:
அயக்காரன்புலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தொகுப்பூதியத்தில், 1985ல் பகுதி நேர தொழில் கல்வி ஆசிரியராக சேர்ந்தேன்; 1992ல் பணி வரையறை செய்யப்பட்டது. தமிழக அரசு 2009ல் பிறப்பித்த அரசாணையில், 1996 முதல் 2003 ஏப்.,1 வரை, தொகுப்பூதியம், தினக்கூலி தொழில் கல்வி ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட்டால், அவர்கள் முந்தைய பணிக்காலத்தில் 50 சதவீதம், ஓய்வூதியத்துக்கு எடுத்து கொள்ளப்படும் என, கூறப்பட்டு இருந்தது. இதன்படி, 50 சதவீத பணி காலத்தை ஓய்வூதியத்துக்கு கணக்கிடும்படி, கல்வித்துறை செயலரிடம் விண்ணப்பித்த போது, பகுதி நேர தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு, 2009ல் பிறப்பித்த அரசாணை பொருந்தாது; அது, முழு நேர ஆசிரியராக வேலை செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றார். எனவே, அவரது உத்தரவை ரத்து செய்து, என் தற்காலிக பணி காலத்தில், 50 சதவீதத்தை எடுத்த கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோல, 17 ஆசிரியர்களும் வழக்கு தொடர்ந்தனர். மனுக்கள் நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர் முருகபாரதி ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்களின் தற்காலிக பணி காலத்தில், 50 சதவீதத்தை ஓய்வூதிய பலன்களில் சேர்க்க வேண்டும். அவர்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு, 50 சதவீத ஓய்வூதிய பலனை, 12 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us