தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாணவர்களிடம் விழிப்பணர்வு

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாணவர்களிடம் விழிப்பணர்வு

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாணவர்களிடம் விழிப்பணர்வு


UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM

ADDED : ஜூலை 02, 2023 04:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM ADDED : ஜூலை 02, 2023 04:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு ஸ்ரீ ரங்கா மருத்துவமனையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து ஒன்பது முதல் பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மேலாண்மை இயக்குனர் டாக்டர் பிச்சுமணி தலைமையில் நடந்தது.இதில், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்று, எதிர்கால தலைமுறையினருக்கான ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:
உலக சுகாதார மையம் ஆரோக்கியம் என்றால் என்ன என்பதை எளிமையாக விளக்கி உள்ளது. ஆரோக்கியம் என்பது உடல், மனம், மனிதன் ஆரோக்கியமாக இருப்பதை மாற்றும் சமுதாயம், அனைத்தையும் அரவணைத்து இருப்பதன் மூலம் தான் அறிய முடியும். இந்த காலக்கட்டத்தில், ஆரோக்கியமான வாழ்க்கை என்பது மிக உன்னதமானது. வாழ்க்கை முறை மாற்றங்களால், தொற்றாநோய்கள் பெரிய அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், 40 வயது மேற்பட்ட 50 சதவீதம் மக்களுக்கு தொற்றா நோய்களில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக தாக்குகிறது.இந்தியாவில், 100 மில்லியன் மக்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர் என, என்.ஐ.சி.எம்.ஆர்., என்ற தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள், உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமாக இருக்கக்கூடிய அபாய நிலை உள்ளது. ஐந்து ஆண்டுகளில் தொற்றா நோய்கள், 30 வயதிற்குள் உள்ளவர்களை அதிகமாக தாக்குகிறது. உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, மாரடைப்பு போன்ற நோய்கள் தாக்கி, 40 வயதுக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னையை அனைவரும் அறிந்து, இளமைக்காலங்களிலேயே அதைத் தடுக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை இளமையிலேயே கற்றுக்கொள்ள வேண்டும்.எதிர்கால தலைமுறையினருக்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்ற நிகழ்வை, ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து, ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களை ஊக்குவித்து நடத்த உள்ளோம். இந்த நிகழ்வின் வாயிலாக உடல், மனம், சமுதாயம் மூன்றையும் இணைத்து, கல்வி அறிவுறுத்தலை, மாவட்ட மனநல பிரிவு மற்றும் மாவட்ட கல்வி மையம், ஸ்ரீ ரங்கா மருத்துவமனையுடன் இணைந்து நடத்த உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.இதில், சுகாதாரத் துறை இணை இயக்குனர்தீர்த்தலிங்கம், செயல் இயக்குனர் டாக்டர் அனுராதா மற்றும் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us