தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆரம்ப பள்ளிகளில் தரமான கல்வி அளிக்க மாநாடு

ஆரம்ப பள்ளிகளில் தரமான கல்வி அளிக்க மாநாடு

ஆரம்ப பள்ளிகளில் தரமான கல்வி அளிக்க மாநாடு


UPDATED : ஜன 05, 2010 12:00 AM

ADDED : ஜன 05, 2010 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 05, 2010 12:00 AM ADDED : ஜன 05, 2010 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: “மாணவர்கள் உயர் கல்வியில் சிறந்து விளங்க, ஆரம்பப் பள்ளிகளில் அவர்களுக்கு தரமான கல்வியளிப்பதன் அவசியம் குறித்த மாநாடு நடத்தவுள்ளோம்,” என செயின்ட்  ஜான்ஸ் பன்னாட்டு உறைவிடப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் கிஷோர் குமார் கூறினார்.


இது குறித்து நேற்று அவர் கூறியதாவது:
ஆரம்ப பள்ளிகளில் நடத்தப்படும் கல்வியானது, தரமாக இருக்க வேண்டும். ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வெறும் மனப்பாடம், திரும்பச் சொல்லுதல், ஞாபகப்படுத்துதல் என இல்லாமல், குழந்தைகளின் ஆளுமையை வளர்க்கும் விதமாக கல்வி இருக்க வேண்டும்.


உயர்கல்வியில் நம் மாணவர்கள் சிறந்து விளங்க, ஆரம்பப் பள்ளிகளிலே அவர்களுக்கு தரமான கல்வியளிப்பது அவசியம். இந்த கருத்தை வலியுறுத்தும் வகையில், ‘இன்றைய குழந்தையின் பாடத்திட்டமும், சவால்களும்’ என்பதை மையமாகக் கொண்டு, ஜன. 8ம் தேதி சென்னையில் மாநாடு நடத்தவுள்ளோம். இதில் சமச்சீர் கல்வி, இலவசக் கல்வி உள்ளிட்டவைகள் குறித்து அலசப்படும்.


தி.நகர், ஜி.ஆர்.டி., கிரான்ட் டேஸ் ஓட்டலில் நடக்கும் இம்மாநாட்டில், பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர். தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆரம்ப பள்ளிகளிலிருந்தும் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு கிஷோர் குமார் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us