தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனைவருக்கும் உயர்கல்வி: தாவர்சந்த் கெலாட் விருப்பம்

அனைவருக்கும் உயர்கல்வி: தாவர்சந்த் கெலாட் விருப்பம்

அனைவருக்கும் உயர்கல்வி: தாவர்சந்த் கெலாட் விருப்பம்


UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM

ADDED : ஜூலை 03, 2023 07:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM ADDED : ஜூலை 03, 2023 07:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு:
அனைவருக்கும் எல்லா இடங்களிலும் உயர்கல்வி கிடைக்க வேண்டும், என கர்நாடகா கவர்னர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்தார்.மைசூரில் நடந்த கர்நாடகா மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை கவர்னர் தாவர்சந்த் கெலாட் வழங்கி பேசியதாவது:
தொலைதுார கல்வியை வழங்குவதில் திறந்தநிலை பல்கலைக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில், தொலைதுாரக் கல்வி மூலம் நாடு முழுதும் உயர்கல்விக்கு மகத்தான பங்களிப்பு அளித்ததற்காக, கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு, ஏ பிளஸ் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சமுதாயத்தில், சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பல மாணவர்களின் கல்விக்கு திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் வழிவகுத்தன. தற்போதைய இந்திய கல்வி முறையில், தொலைதுாரக் கல்வி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று பெண்கள் அதிக பதக்கங்களை வென்றிருப்பது, அவர்கள் அதிகாரம் பெற்றதற்கான அடையாளமாகும். தரமான கல்வி, வழிகாட்டுதல், திறன்கள், தரமான சிந்தனை மற்றும் எதிர்கால உருவாக்கம் அனைத்தும் ஒரு தனி நபரின் முழு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம்.வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இறையாண்மை கொண்ட நாடு இந்தியா. உலக நலனையும், உலக அமைதியையும் இந்தியா ஊக்குவித்து வருகிறது. ஆனால், இன்று உலகம் முழுதும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவருக்கும் பொறுப்பு. பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளை உருவாக்குதல், மழைநீர் சேகரிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது முதன்மை கடமை.இவ்வாறு அவர் பேசினார்.பட்டமளிப்பு விழாவில், 52 மாணவ - மாணவியருக்கு 44 தங்கப் பதக்கங்களும், 27 பேருக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us