தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலை கல்லூரிகள் இன்று திறப்பு

கலை கல்லூரிகள் இன்று திறப்பு

கலை கல்லூரிகள் இன்று திறப்பு


UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM

ADDED : ஜூலை 03, 2023 11:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM ADDED : ஜூலை 03, 2023 11:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
கவுன்சிலிங் பணி, 90 சதவீதம் முடிந்த நிலையில் இன்று முதல் அரசு கலைக் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்குகிறது.மாவட்டத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, மே 9ம் தேதி வெளியிடப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு, கல்லுாரி இணையதள முகவரியில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. சிறப்பு ஒதுக்கீடு, விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவத்தினரை தொடர்ந்து, அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கு மூன்று கட்டமாக கவுன்சிலிங் கடந்த மாதம் நடத்தப்பட்டது. கவுன்சிலிங் பணிகள், 90 சதவீதம் முடிந்துள்ள நிலையில், இன்று கல்லுாரி திறக்கப்பட்டு, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்குகிறது.திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்.சி., கணித பாடப்பிரிவில், 35 இடங்கள் உட்பட, 47 இடங்களும், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் மொத்தம், பத்து இடங்களும் இதுவரை நிரப்பப் படாமல் உள்ளன. இந்த இடங்கள் இறுதி கட்ட கவுன்சிலிங் அல்லது அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட உள்ளது. இன்று கல்லுாரிகளில் ஸ்பாட் அட்மிஷனும் நடக்கவுள்ளது. பள்ளி படிப்பு முடித்து விட்டு, முதன் முதலில் கல்லுாரியில் இணைய உள்ள இளம்தலைமுறையினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கல்லுாரி நிர்வாகங்களும் தயாராகியுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us