தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவை மாணவர்கள் பதக்க வேட்டை

கோவை மாணவர்கள் பதக்க வேட்டை

கோவை மாணவர்கள் பதக்க வேட்டை


UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM

ADDED : ஜூலை 03, 2023 02:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM ADDED : ஜூலை 03, 2023 02:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
சென்னையில் நடந்த மண்டல அளவிலான கராத்தே போட்டியில், கோவை பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஒன்பது பதக்கங்கள் வென்று அசத்தினர்.ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில் நடக்கும் ஐ.சி.எஸ்.சி.இ., பள்ளி மாணவர்களுக்கான மண்டல அளவிலான கராத்தே போட்டி, ஜூலை 1ல் சென்னை வேல்ஸ் சர்வதேச பள்ளியில் நடந்தது. போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர். இதில் பங்கேற்ற கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவியர் நான்கு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் என, ஒன்பது பதக்கங்கள் வென்றனர்.வெற்றி பெற்றவர்கள்:
14 வயது பிரிவில், காவேரி 17 வயது பிரிவில், அஷ்வத், மோனிஸ்ரீ, இனியா ஆகியோர் தங்கம்; 14 வயது பிரிவில் ரெஷ்விந்த் மற்றும் விமல் ராஜன் ஆகியோர் வெள்ளி மற்றும் 14 வயது பிரிவில் பத்ரிசரண், ஷசாஸ்த்ரஜித் ஷஸ்வந்த் மற்றும் சாய் கங்கா ஆகியோர் வெண்கலம் வென்றனர். பதக்கம் வென்ற மாணர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். மாணவர்களை ஆசிரியர்கள், கோவை மாவட்ட கராத்தே சங்க நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us