தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி முறையில் மாற்றம் வேண்டும்: கவர்னர்

கல்வி முறையில் மாற்றம் வேண்டும்: கவர்னர்

கல்வி முறையில் மாற்றம் வேண்டும்: கவர்னர்


UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM

ADDED : ஜூலை 05, 2023 04:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM ADDED : ஜூலை 05, 2023 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக கவர்னர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பல்கலைகளின் காலிப் பணியிடங்களை நிரப்புவது மற்றும் கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து, சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுடன், கவர்னர் ரவி நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை கவர்னர் மாளிகையில், கவர்னரின் முதன்மை செயலர் ஆனந்தராவ் பாட்டீல் முன்னிலையில், இந்த ஆலோசனை நடந்தது. பல்கலைகளின் கல்வி தரம் உயர்வு, நிர்வாக சீர்திருத்தம், பல்கலைகளின் தன்னாட்சி அதிகாரங்கள் பறிபோவது குறித்து, உறுப்பினர்கள் தெரிவித்தனர். பெரும்பாலான நேரங்களில், பல்கலை சிண்டிகேட், செனட், நிர்வாக குழு கூட்டங்கள், பல்கலைகளின் வளாகங்களுக்கு பதில், தலைமை செயலகத்திலேயே நடப்பது குறித்து கவலை தெரிவித்தனர்.பாடத்திட்டங்கள், கற்றல், கற்பித்தல் முறைகளிலும், தேவையான நேரத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். பல்கலைகளின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பதவிகளில், அதிக காலியிடங்கள் உள்ளன. அவற்றை, யு.ஜி.சி., விதிகளின்படி நிரப்ப வேண்டும் என, கவர்னர் தெரிவித்தார். சில பல்கலைகளில் துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இந்த நிலையை தவிர்க்க, புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ள, அரசின் கவனத்தை உறுப்பினர்கள் ஈர்க்க வேண்டுமென, கவர்னர் கேட்டுக் கொண்டார்.தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்; தொழில் நிறுவனங்களின் நிபுணர்களை, பல்கலைகளின் குறுகிய கால ஆசிரியர்களாக நியமித்து, மாணவர்களின் தொழில் முனைவோருக்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us