தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

உயர்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

உயர்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM

ADDED : ஜூலை 05, 2023 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM ADDED : ஜூலை 05, 2023 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பிளஸ் 2 முடித்து, உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கான உயர்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடந்தது. விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் நடந்த விழாவில் கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:
தமிழக அரசு, மாவட்டம் தோறும் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பிளஸ் 2 முடித்து, உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கு உயர்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தி, மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் கல்வி மாவட்டங்களில் உயர்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில், பிளஸ் 2 முடித்து, உயர் கல்வி பயிலாத 550 மாணவர்களுக்கு உயர்வுக்கு படி நிகழ்ச்சி வாயிலாக வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. உயர் கல்வி படித்தால்தான் பல நன்மைகள் கிடைக்கும். உயர் கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், இலவச கல்விக் கட்டணம், மாணவியர்களுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை, கல்விக்கடன், முதல் பட்டதாரி சான்றிதழ், கல்வி உதவித்தொகை, வேலை வாய்ப்பில் முன்னுரிமை போன்றவை பெறலாம். இது குறித்து விளக்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். உயர் கல்வி, வாழ்வில் உயர்வுக்கு மிக அவசியம். கல்வி கற்பதன் மூலம் சமூகத்தில் நல்ல மரியாதை, மன நிறைவான வாழ்க்கை கிடைக்கும். பெண்களுக்கு உயர் கல்வி எதற்கு, என்ற தவறான புரிதல் சிலரிடம் காணப்படுகிறது.இந்த நிலை மாற வேண்டும். பெண்களும் உயர்கல்வி பயில வேண்டும். ஒரு பெண் கல்வி பயின்றால் அந்த குடும்பமே முன்னேறும். விழுப்புரம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 600 பேர் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றனர். அதில், 11 ஆயிரம் பேர் உயர் கல்விக்காக விண்ணப்பித்துள்ளனர். விடுபட்ட 600 பேரையும், உயர் கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 100 சதவீத மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்து, முன்னோடி மாவட்டமாக வேண்டும் என்பதே குறிக்கோளாகும்.விடுபட்ட மாணவர்களின் உயர் கல்விக்குத்தேவையான அனைத்து உதவிகளும் அரசால் செய்து கொடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் குடும்ப மற்றும் பொருளாதார சூழ்நிலை போன்ற இக்கட்டுகளைக் கடந்து, வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.விழாவில் உயர்வுக்கு படி வழிகாட்டுதல் கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. எஸ்.பி., சசாங்சாய், ஆர்.டி.ஓ., பிரவீனாகுமாரி, சி.இ.ஓ., அறிவழகன், வேலை வாய்ப்புத் துறை உதவி இயக்குனர் பாலமுருகன் உள்ளிட்ட அலுவலர்கள், கல்லுாரி முதல்வர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us