UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM
ADDED : ஜூலை 05, 2023 10:26 AM
புதுச்சேரி :
சென்டாக் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களை மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.நீட் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் நிர்வாகம் ஆன்லைனில் விண்ணப்பம் பெற்றுள்ளது. அதில், விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் டென்னிக்காய்ட் விளையாட்டு இடம் பெறவில்லை.இதனால், பாதிக்கப்பட்ட டென்னிக்காய்ட் வீரர்கள் நேற்று தங்கள் பெற்றோருடன், காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த அதிகாரிகள் கல்வித்துறைக்கு சென்று முறையிட கூறினர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள், இந்திரா சதுக்கம் அருகே உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். அப்போது, அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனையேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலைந்து சென்றனர்.
