UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM
ADDED : ஜூலை 05, 2023 10:56 AM
சென்னை:
சென்னையில், மாநில அளவிலான முதல்வர் கோப்பை போட்டிகள் நடக்கின்றன.இது குறித்து, பொதுமக்கள் அறியும் வகையில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தின் முன்பக்க சுவர் முழுதும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தின் விளையாட்டு பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், இரட்டை கம்பு சுழற்றும் வீராங்கனை மற்றும் கபடி வீரரை மடக்கிப் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரையப்பட்டுள்ள இதை, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, முதன்மை செயலர் அதுல்யமிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலர் அபூர்வா, தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் சங்கர் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
