தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2 மாதங்களுக்கு பின் மணிப்பூரில் பள்ளிகள் திறப்பு

2 மாதங்களுக்கு பின் மணிப்பூரில் பள்ளிகள் திறப்பு

2 மாதங்களுக்கு பின் மணிப்பூரில் பள்ளிகள் திறப்பு


UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM

ADDED : ஜூலை 06, 2023 03:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM ADDED : ஜூலை 06, 2023 03:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மெய்டி மற்றும் கூகி சமூக மக்களிடையே, இடஒதுக்கீடு தொடர்பாக மோதல் ஏற்பட்டது. கடந்த மே 3ம் தேதி துவங்கி தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்தன; 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. சில நாட்களாக இந்த ஊரடங்கு உத்தரவு சற்று தளர்த்தப்பட்டு வந்தது. இதற்கிடையே அமைதி காக்கும்படி, மாநில கவர்னர் அனுசுயா உய்க்கே வேண்டுகோள் விடுத்தார்.இந்நிலையில், மணிப்பூரில் 2 மாதங்களாக நீடித்த வன்முறை சூழலுக்கு இடையே இம்பாலில் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் உற்சாகமாக வந்தனர். சில மாணவிகள் பள்ளி வாசலில் உள்ள சுவரை தொட்டு வணங்கி உள்ளே வந்தனர். குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் வருகை இருந்தாலும், பள்ளி திறக்கப்பட்டுள்ளதற்கு அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அரசின் இந்த முடிவுக்கு பெற்றோர் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மற்ற சில பள்ளிகள் தற்போது நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் அவை மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.உணவு தட்டுப்பாடு?
மணிப்பூரில், 23 லட்சம் விவசாயிகள், 1.94 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். வன்முறை காரணமாக, இரண்டு மாதங்களாக விவசாயப் பணிகள் நடக்கவில்லை. குறிப்பாக, 5,127 ஹெக்டேர் பரப்பில் கடந்த இரண்டு மாதங்களில் நடவுப் பணிகள் நடந்திருக்க வேண்டும். நடவுப் பணிகள் நடக்காததால், 1.54 கோடி கிலோ நெல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us