முன்னாள் நீதிபதிக்கு டாக்டர் பட்டம்: அழகப்பா பல்கலை
முன்னாள் நீதிபதிக்கு டாக்டர் பட்டம்: அழகப்பா பல்கலை
UPDATED : ஜன 06, 2010 12:00 AM
ADDED : ஜன 06, 2010 11:28 AM
அ நிறம் | அளவு
சென்னை: சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி மோகனுக்கு, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில், ஜன. 9ம் தேதி டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா வரும் 9ம் தேதி நடக்கிறது. இவ்விழாவிற்கு, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான சுர்ஜித்சிங் பர்னாலா தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொள்கிறார்.
இவ்விழாவில், சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி மோகனின் சேவையை பாராட்டி, அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.
