UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM
ADDED : ஜூலை 06, 2023 10:07 AM
சென்னை:
சென்னை வர்த்தக மையத்தில் வரும் 8ம் தேதி 500 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பங்கேற்கும் வேளாண் வணிக திருவிழா நடக்கிறது.வேளாண் வணிகத்துறை வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாய குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்புகூட்டி விற்பனை செய்வதற்கு மானிய உதவி வழங்கப்படுகிறது. இவர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளது.இவர்களின் வணிகத்தை அதிகரிக்கும் வகையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வரும் 8ம் தேதி, வேளாண் வணிக திருவிழாவிற்கு, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கருத்தரங்கமும் நடக்க உள்ளது. இதில் 500 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இவர்கள் உற்பத்தி செய்த பொருட்கள் 200 ஸ்டால்களில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன. வேளாண் வணிக திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் வணிகப் பிரிவினர் செய்து வருகின்றனர்.
