UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM
ADDED : ஜூலை 06, 2023 10:29 AM
திருப்பூர்:
பள்ளி கல்வித்துறை பெயரில் சமூக வலைதளத்தில் உலா வரும் முகநுால் பக்கத்தில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் கருத்துகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என புகார் எழுந்துள்ளது. பள்ளிக்கல்வி, வேளாண்மை உட்பட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கென சமூக வலைதள பக்கங்களை உருவாக்கி, துறை சார்ந்த தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். தேசிய ஆசிரியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செய்தி தொடர்பு செயலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:பள்ளிக்கல்வித்துறை என்ற பெயரிலான முகநுால் பக்கத்தில் மக்கள் பிரதிநிதிகளை விமர்சிப்பது; அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலான பதிவுகளை வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அத்தகைய முகநுால் பக்கங்கள் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ முகநுால் பக்கமா அல்லது யாரேனும் போலியாக உருவாக்கி, குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனரா என தெரியவில்லை. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
