காலமுறை ஊதியம் கோரி சிறப்பு ஆசிரியர்கள் மனித சங்கிலி
காலமுறை ஊதியம் கோரி சிறப்பு ஆசிரியர்கள் மனித சங்கிலி
UPDATED : ஜன 06, 2010 12:00 AM
ADDED : ஜன 06, 2010 11:34 AM
சென்னை: மனவளர்ச்சி குன்றியோருக்கான அகில இந்திய கூட்டமைப்பு, சிறப்பு குழந்தைகளின் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் கேட்டு வருகிறது. கோரிக்கையை நிøவேற்றக் கோரி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மனித சங்கிலி நடந்தது.
இது குறித்து, கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் ஐந்து லட்சம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கான ஒரே ஒரு அரசு சிறப்பு பள்ளி சிட்லபாக்கத்தில் மட்டும் உள்ளது. மாநிலம் முழுவதும், 250 சிறப்பு பள்ளிகளை தொண்டு நிறுவனங்கள் தான் நடத்தி வருகின்றன. இங்கு பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி வருகிறோம்’ என்றனர்.
மனித சங்கிலியில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட் டங்களைச் சேர்ந்த சிறப்பு குழந்தைகள், சிறப்பு ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
