UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM
ADDED : ஜூலை 08, 2023 09:11 AM
வாரணாசி:
வருங்கால சந்ததியினர் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதை மனதில் கொண்டே வளர்ச்சி திட்டங்களை பா.ஜ. கொண்டு வந்துள்ளதாக பிரதமர் மோடி பேசினார்.பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், வாரணாசி மக்களின் வாழ்க்கை வசதியை மேம்படுத்தும் நோக்கில் அரசு திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கிடவும், பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தார். விமான நிலையத்திலிருந்து வந்திறங்கிய அவரை கொட்டும் மழையிலும் மக்கள் வரவேற்றனர்.வாரணாசியில் வளர்ச்சித்திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில், கடந்த 9 ஆண்டுகளில், வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதை மனதில் கொண்டு வளர்ச்சி பணிகளை நிறைவேற்றி வருகிறோமே தவிர ஒரு குடும்பம் மற்றும் ஒரு தலைமுறைக்கான திட்டங்களை உருவாக்கவில்லை . வாரணாசி நகரின் வளர்ச்சிப்பணிகளுக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பரிசு கிடைத்துள்ளது. இந்நகருக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வளர்ச்சித்திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே பா.ஜ.,வின் கொள்கை. , இவ்வாறு மோடி பேசினார். முன்னதாக கோரக்பூரில் நடந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
