UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM
ADDED : ஜூலை 08, 2023 09:32 AM
கோவை:
சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகரில் உள்ள அங்கன்வாடி மையம், நமக்கு நாமே திட்டத்தில் மறுசீரமைக்கப்பட்டது.40க்கும் மேற்பட்டோர் கல்வி பயிலும் நிலையில், குழந்தைகளுக்கு எளிதில் கல்வி புகட்டும் விதமாக, ஏராளமான விளையாட்டு உபகரணங்களுடன், பூங்கா, குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கலெக்டர் கிராந்திகுமார், இம்மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, கணபதி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தில், 30 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை புனரமைக்கப்பட்டுள்ளது.அவற்றை திறந்து வைத்த கமிஷனர் பிரதாப், மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் பல்வேறு வசதிகளை செய்துதர, தன்னார்வலர்கள் முன்வர வேண்டும், என கேட்டுக்கொண்டார். மேயர் கல்பனா, மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி உட்பட பலர் பங்கேற்றனர்.
