UPDATED : ஜூலை 09, 2023 12:00 AM
ADDED : ஜூலை 09, 2023 07:29 AM
கோவை:
கோவை - திருச்சி ரோடு, செயின்ட் பிரான்சிஸ் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 986 மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு ஓட்டளிக்கும் முறை, தேர்தல் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கலாசார செயலாளர், சமூக லீக், விளையாட்டு கேப்டன், ஆர்.எஸ்.பி., உள்ளிட்ட 14 பதவிகளுக்கு மாணவியர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட்டது; தேர்தல் ஆணையம் நடத்துவது போன்றே நடத்தப்பட்டது. பள்ளி மாணவியரும் முதன்முறையாக ஓட்டளிக்கிறோம் என்கிற ஆனந்தத்தில் ஓட்டளித்தனர். அதிக ஓட்டுகள் பெற்ற மிதுனா, ஸ்கூல் பீப்பிள் லீடராகவும், டினோசியா கேத்தரீன் துணை பீப்பிள் லீடராகவும் தேர்வாகினர். போட்டியிட்டு வெற்றி பெற்ற பிற மாணவியருக்கு, பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன.தலைமையாசிரியர் கரோலின் விக்டோரியா கூறுகையில், மாணவியருக்கு தேர்தல் விதிமுறைகள், ஓட்டளிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தேர்தல் நடத்தப்பட்டது. ஆசிரியர்களும் ஓட்டளித்தனர், என்றார்.
