இருதரப்பு ஒத்துழைப்பு: இந்தியா - தான்சானியா ஒப்புதல்
இருதரப்பு ஒத்துழைப்பு: இந்தியா - தான்சானியா ஒப்புதல்
UPDATED : ஜூலை 10, 2023 12:00 AM
ADDED : ஜூலை 10, 2023 09:44 AM
கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியா சென்றுள்ள நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டெர்கோமெனா டேக்ஸ் தலைமையில் நடந்த, 10வது இந்திய - தான்சானியா கூட்டுக்க மிஷன் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, பல்வேறு துறைகளிலும், இரு நாட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.கூட்டத்துக்கு பின் ஜெய்சங்கர் கூறியதாவது:
கூட்டுக் கமிஷன் கூட்டம் மிக சிறப்பாக நடந்தது. இருநாட்டு உறவை மதிப்பிடவும், நாம் முன்னோக்கி செல்ல வேண்டிய பாதைகள் குறித்து விவாதிக்கவும் இது வாய்ப்பாக அமைந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து விவாதித்தோம். தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் வலுவான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் பேசினோம். பயிற்சி மற்றும் பரிமாற்றங்களை விரிவுபடுத்துவது குறித்தும், சுகாதாரம், விவசாயம், ராணுவம், கல்வி உள்ளிட்ட துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ஒப்புக் கொண்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த பயணத்தின் போது, தான்சானியா அதிபர் சாமியா ஹசனையும், நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
