தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உழைப்பும், ஒற்றுமையும் வேண்டும்: ஜார்கண்ட் மாநில கவர்னர் பேச்சு

உழைப்பும், ஒற்றுமையும் வேண்டும்: ஜார்கண்ட் மாநில கவர்னர் பேச்சு

உழைப்பும், ஒற்றுமையும் வேண்டும்: ஜார்கண்ட் மாநில கவர்னர் பேச்சு


UPDATED : ஜூலை 11, 2023 12:00 AM

ADDED : ஜூலை 11, 2023 09:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2023 12:00 AM ADDED : ஜூலை 11, 2023 09:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை :
ஒருவரது மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைவது உழைப்பு; அந்த உழைப்புடன் ஒற்றுமை இருந்தால் சமுதாயம் மேம்படும் என ஜார்கண்ட் மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன் பேசினார்.கோவை சிட்டிசன் போரம் சார்பில் ஜார்கண்ட் மாநில கவர்னர் ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடந்தது.ஏற்புரையில் கவர்னர் பேசியதாவது:
ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் நிறைவேற வேண்டும். தனி ஒரு மனிதன் எந்த இயக்கத்தில் இருந்தாலும், அவர்களிடம் உள்ள நல்லவற்றை கவனித்து தனதாக்கிக் கொள்ள வேண்டும். பிறரது உணர்வையும் மதித்து நடந்து கொள்ள வேண்டும். ஜார்கண்ட் மாநிலத்தில் நான் பதவியேற்று 140 நாட்களில், 7,200 கி.மீ., துாரம் பயணித்து மக்களின் குறைகளை நேரடியாக பார்த்து அறிந்துள்ளேன். சிறு, குறு நடுத்தர தொழில்கள் இல்லை என்றால், முன்னேற்றம் இல்லை. ஒருவரது மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைவது உழைப்பு; அந்த உழைப்புடன் ஒற்றுமை இருந்தால் அது சமுதாயத்தை மேம்படுத்தும்.நல்லவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், எதிரியின் வியூகத்தை அறிய வேண்டும். மக்களிடம் நெருங்கிய செயல்பாடுகளால் மட்டுமே வெற்றி பெற முடியும். எவ்வளவு அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், நமது பயணம் பொருளாதார வளர்ச்சி நோக்கி இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சியும் தொழிலாளர் நலனும் ஒன்று சார்ந்து இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கோவை மாவட்ட பா.ஜ., தலைவர் உத்தமராமசாமி வரவேற்றார். சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், எம்.எல்.ஏ., வானதி, கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார், ம.தி.மு.க., உயர்மட்ட குழு உறுப்பினர் மோகன் குமார், கொடிசியா தலைவர் திருஞானம், முன்னாள் அமைச்சர் வேலுமணி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் பேசினர்.கோவைக்கு போக்குவரத்து வசதிகள் மேம்படுத்த வேண்டும். மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும். விமானநிலைய விரிவாக்கத்தை விரைவில் முடிக்க வேண்டும் என கவர்னரிடம் தொழில்துறையினர் கோரிக்கை வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us