தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய அமைச்சர் உத்தரவு

பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய அமைச்சர் உத்தரவு

பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய அமைச்சர் உத்தரவு


UPDATED : ஜூலை 11, 2023 12:00 AM

ADDED : ஜூலை 11, 2023 04:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2023 12:00 AM ADDED : ஜூலை 11, 2023 04:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
கனமழையால் அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்ததைத் தொடர்ந்து, அனைத்து அரசுப் பள்ளிக் கட்டடங்களையும் ஆய்வு செய்ய கல்வி அமைச்சர் அதிஷி சிங் மர்லேனா உத்தரவிட்டுள்ளார்.தலைநகர் டில்லியில் தென்மேற்கு பருவமழை ஜூன் 25ல் துவங்கியது. நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. மாநகர் முழுதும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்றும் கனமழை தொடர்ந்தது. இடைவிடாத மழை காரணமாக டில்லி ஸ்ரீனிவாசபுரியில் உள்ள அரசு பள்ளியின் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்தது.இதையடுத்து, டில்லி கல்வி அமைச்சர் அதிஷி சிங் மர்லேனா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஸ்ரீனிவாசபுரி பள்ளி 35 ஆண்டுகள் பழமையானது. டில்லியில் நேற்று முன்தினம் மட்டும் 15.3 செ.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது. அதனால் அதன் சுற்றுச் சுவர் நீரில் ஊறியதில் இடிந்துள்ளது. டில்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் கட்டடங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.கல்வித் துறை மண்டல இயக்குனர்கள், மாவட்ட கல்வி இயக்குனர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
டில்லியில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. கனமழை தொடரும் என வானிலை ஆய்வு எச்சரித்துள்ளது. எனவே, டில்லியில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.17 ரயில்கள் ரத்து
வடக்கு ரயில்வே தலைமை செய்தித் தொடர்பு அதிகாரி தீபக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: 
கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. எட்டு இடங்களில் மோட்டார் பம்புகள் வாயிலாக தண்டவாளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி நடக்கிறது. அம்பாலா - நியூ மொரிண்டா, நங்கல் அணை - ஆனந்த்பூர் சாஹிப், கிராத்பூர் சாஹிப் - பாரத்கர் ரயில் பாதையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரோஸ்பூர் கான்ட் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், சண்டிகர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் அமிர்தசரஸ் சந்திப்பு எக்ஸ்பிரஸ் உட்பட 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், மும்பை சென்ட்ரல் - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ், தௌலத்பூர் சௌக் எக்ஸ்பிரஸ் ஆகியவை திருப்பி விடப்பட்டுள்ளன.மீட்பு
மேற்கு டில்லி மோதி நகரில் உள்ள ஜாகிரா என்ற இடத்தில் நேற்று, கனமழையால் தகரக் கொட்டகை இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த ஆலம் 8, மற்றும் மரலுதீன் 8, ஆகிய இருவரையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். லேசான காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மீட்புப் பணியின்போது, தீயணைப்பு வீரர் தல்ஜீத் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us