தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பணி ட்ரோன்கள் 2,500 பேருக்கு இலவசம்

வேளாண் பணி ட்ரோன்கள் 2,500 பேருக்கு இலவசம்

வேளாண் பணி ட்ரோன்கள் 2,500 பேருக்கு இலவசம்


UPDATED : ஜூலை 11, 2023 12:00 AM

ADDED : ஜூலை 11, 2023 08:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2023 12:00 AM ADDED : ஜூலை 11, 2023 08:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
நாடு முழுவதும், 2,500 இளைஞர்களுக்கு, விவசாய நிலத்தில் உரம் தெளிக்கும், ட்ரோன்கள்களை, மத்திய அரசின் வேளாண் கூட்டுறவு நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. இதற்கான ட்ரோன் இயக்க பயிற்சி, சென்னையில் நேற்று துவங்கியது.மத்திய அரசின் வேளாண் கூட்டுறவு நிறுவனமான, இப்கோ சார்பில், நாடு முழுதும் 2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயன்பாட்டு ட்ரோன்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. ட்ரோன் இயக்கும் பயிற்சியும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் துவக்க நிகழ்ச்சி, அண்ணா பல்கலையின் குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லூரியில் நேற்று நடந்தது. எம்.ஐ.டி., வான்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தில்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலையின் துணைவேந்தர் வேல்ராஜ் பங்கேற்று, பயிற்சியை துவக்கி வைத்தார்.முதற்கட்டமாக தமிழகம், கர்நாடகாவில் தலா 200 பேர் வீதம், 400 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 10 நாட்கள், தியரி மற்றும் சிமுலேட்டர் என்ற கணினி வழி ட்ரோன் இயக்க பயிற்சியும், ஐந்து நாட்கள் நேரடியாக விவசாய நிலங்களில் மருந்து தெளிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளன.பயிற்சி குறித்து எம்.ஐ.டி., வான்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தில்குமார் கூறியதாவது:
வேளாண் நிலங்களில் விவசாய பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் முறை, பூச்சி பாதித்த பகுதிகளை கணினி மற்றும் மொபைல் ஃபோனில் எல்லை நிர்ணயம் செய்வது, நீராலான மருந்துகளை தெளித்தல், திட வடிவில் உள்ள நானோ யூரியா உரம் தெளித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.ட்ரோன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், உலக அரங்கில் இந்தியாவும், இந்திய அளவில் தமிழகமும் முன்னணியில் விளங்குகின்றன. விரைவில் ம.பி., கர்நாடகா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட இடங்களில், அண்ணா பல்கலையின், ட்ரோன் பயிற்சி மைய கிளைகள் அமைக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.விமான போக்குவரத்துத்துறை சென்னை மண்டல இயக்குனர் துரைராஜ் பேசியதாவது:ட்ரோன் இயக்குபவர்கள், தயாரிப்பவர்கள், மத்திய அரசின் ட்ரோன் பறக்கும் விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ட்ரோன்களை இயக்குவோர், அதை வைத்திருப்போர், விமான போக்குவரத்து துறையின் இணையதளத்தில் பதிவு செய்வதும் கட்டாயமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us