தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை: எஸ்.பி., நடவடிக்கை

பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை: எஸ்.பி., நடவடிக்கை

பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை: எஸ்.பி., நடவடிக்கை


UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM

ADDED : ஜூலை 12, 2023 06:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM ADDED : ஜூலை 12, 2023 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் மாணவர்கள் பாதுகாப்பு கருதி, நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், காலை 7:00 மணி முதல், காலை 10:00 மணி வரையும், மதியம் 3:30 மணி முதல், மாலை 6:00 மணி வரையும், கனரக வாகனங்களை இயக்குவதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது என, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார்.காஞ்சிபுரம் அடுத்த, ஆற்பாக்கம், மாகரல், திருவண்ணாமலை மாவட்டம் ஆகிய பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட கல் குவாரிகள், கிரஷர்கள் இயங்கி வருகின்றன. அங்கிருந்து எடுத்து செல்லப்படும் கல், ஜல்லிகள், எம்.சாண்ட் போன்றவை கட்டுமான பணிகளுக்காக லாரிகள் வாயிலாக சென்னை, தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தினசரி 100க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருகின்றன.கடும் நெரிசல்
இதில் காஞ்சிபுரம் - ஓரிக்கை வழியாக வரும் லாரிகள், மிலிட்டரி சாலை வழியாக வாலாஜாபாத், தாம்பரம், சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்கின்றன. அதே போல, வந்தவாசி - செவிலிமேடு வழியாக மிலிட்டரி சாலை வரும் லாரிகளுக்கு, பள்ளி நேரத்தில் நகர்ப்புற பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அரக்கோணம், திருத்தணி போன்ற பகுதிகளுக்கு செல்லும் லாரிகள் புறவழியாக செல்கின்றன. இந்நிலையில், ஓரிக்கை வழியாக மிலிட்டரி சாலை வழி வரும் லாரிகள், மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்திலும் செல்வதால், ஓரிக்கை நான்குவழிச்சாலை சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாணவர்கள் பள்ளி செல்வதற்கும், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் அச்சத்துடன் சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், முதியவர் ஒருவர் பேத்தியை பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது, தடுமாறி லாரி அருகே கீழே விழுந்தார்.சீரானது
இருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், அப்பகுதி மக்கள் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் வருவதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பெற்றோர் கோரிக்கை மற்றும் மாணவ - மாணவியர் பாதுகாப்பு கருதி நேற்று முதல் ஓரிக்கை, செவிலிமேடு ஆகிய பகுதிகளில் இருந்து, மிலிட்டரி சாலை வழியாக செல்லும் லாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. காலை 7:00 - 10:00 மணி வரையிலும்; மாலை 3:30 - - 6:00 மணி வரையிலும் லாரிகள் இச்சாலை வழியாக செல்வதற்கு தடை செய்யப்பட்டு உள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார். பள்ளி, கல்லுாரி வாகனங்கள், பயணியர் வாகனங்கள் மட்டும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us