தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜூலை 15 முதல் மின்னொளியில் கடற்கரை கோவில்

ஜூலை 15 முதல் மின்னொளியில் கடற்கரை கோவில்

ஜூலை 15 முதல் மின்னொளியில் கடற்கரை கோவில்


UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM

ADDED : ஜூலை 12, 2023 06:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM ADDED : ஜூலை 12, 2023 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பாரம்பரிய சின்னங்களை, இரவு 9:00 மணி வரை பயணியர் பார்வையிடலாம் என, தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதற்காக, மின் விளக்கு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களை காண, இந்தியா மட்டுமின்றி, சர்வதேச பயணியரும் ஒவ்வொரு ஆண்டும் படையெடுக்கின்றனர். இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்களைக் காண, காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர்.இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருக்கும் இவ்வளாகத்தில், பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர் சந்தித்த போது, சிற்பங்களின் பாரம்பரிய தன்மையை பாதிக்காத வகையில், ஒளி உமிழ்வு குறைவான மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. அப்போது, மின்னொளியில் ஜொலித்த சிற்பங்களைக் காண, பார்வையாளர் நேரம் நீட்டிக்கப்பட்டு, இரவு 9:00 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். நாளடைவில், மழைநீர் சூழ்ந்ததால் அலங்கார விளக்குகள் பழுதடைந்தன.கொரோனா கால தடைக்குப் பின், மீண்டும் இரவில் பயணியரை அனுமதிக்க முடிவெடுத்த தொல்லியல் துறை நிர்வாகம், கடந்த ஆண்டு, மழைநீரால் பாதிக்கப்படாதவாறு, தரைமட்டத்திற்கு மேலே மின் விளக்குகளை அமைத்தது. ஆனால் அவை, பயன்படுத்தப்படாமல் மீண்டும் பழுதடைந்தன. கடந்த பிப்., 1ம் தேதி, ஜி - 20 நாடுகளின் பிரதிநிதிகள், சிற்பங்களை பார்வையிட்டதால், புதிய விளக்குகள் பொருத்தப்பட்டு, இரவில் சிற்பங்கள் ஒளிர்ந்தன. தொடர்ந்து, இரவில் பயணியரையும் அனுமதிக்கலாம் என எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றமே நீடித்தது. இது தொடர்பாக, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரை கோவில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் அருகில் உள்ள சிவகங்கை பூங்கா கோட்டை, கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 14 பாரம்பரிய பகுதிகளில், இரவு 9:00 மணி வரை பார்வையாளர்களை அனுமதிக்க, தொல்லியல் துறை உத்தரவிட்டு உள்ளது. வரும் 15ம் தேதி முதல், பார்வையாளர்களை அனுமதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us