தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறுபான்மையினருக்கு கல்வி உதவி: அரசுக்கு கண்டனம்

சிறுபான்மையினருக்கு கல்வி உதவி: அரசுக்கு கண்டனம்

சிறுபான்மையினருக்கு கல்வி உதவி: அரசுக்கு கண்டனம்


UPDATED : ஜன 07, 2010 12:00 AM

ADDED : ஜன 07, 2010 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2010 12:00 AM ADDED : ஜன 07, 2010 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘மத அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கி வருவது, சமூக நீதி தத்துவத்திற்கு விரோதமானது’ என, தேசிய அரசியல் கட்சி ஒன்று தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.


மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:


பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு, மதத்தின் அடிப்படையில், நடப்பு நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 439, கிறிஸ்துவ, முஸ்லிம் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை, 26.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்துவ, முஸ்லிம் மாணவர்களுக்கு ரூபாய் பத்தாயிரமும், இதற்கு மேற்பட்டு பயிலும் மாணவர் களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை, 12 ஆயிரத்து 350 ரூபாயும் தொழிற் கல்வி, தொழில் நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.


மத அடிப்படையில் கிறிஸ்துவ, முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கி வருவது, சமூக நீதி தத்துவத்திற்கே விரோதமானது. அவர்களை விட அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், அவர்களை விட ஏழ்மை நிலையில் வாடினாலும், ‘இந்து’வாக இருப்பதால், கல்வி உதவித் தொகை இல்லை என்று மறுப்பதும், நடுநிலையாக இருக்க வேண்டிய அரசு செய்கிற மிகப்பெரிய துரோகம். இத்திட்டத்தை விரிவுப்படுத்தி, வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்.


இக்கோரிக்கையை அரசு நிராகரித்தால், தமிழகம் முழுவதும் கோரிக்கை நிறைவேறும் வரை, மாணவர்களை திரட்டி, பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us