தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுத்தேர்வு எழுதாதவர்களை தொழிற்கல்வியில் சேர்க்க ஏற்பாடு

பொதுத்தேர்வு எழுதாதவர்களை தொழிற்கல்வியில் சேர்க்க ஏற்பாடு

பொதுத்தேர்வு எழுதாதவர்களை தொழிற்கல்வியில் சேர்க்க ஏற்பாடு


UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM

ADDED : ஜூலை 12, 2023 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM ADDED : ஜூலை 12, 2023 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் பங்கேற்காத, தேர்ச்சி பெறாத, துணைத்தேர்வுகள் எழுதாத மாணவர்களை ஐ.டி.ஐ., பாலிக்டெக்னிக்கில் சேர்க்க பள்ளி மேலாண்மை கூட்டம் ஜூலை 19ல் நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வு நடந்தது. அதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்கவில்லை. சிலர் தேர்வில் தோல்வி அடைந்தனர். துணைத் தேர்வுகளில் பங்கேற்காமல் இருந்தனர். அவர்களை பற்றிய விவரங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜூலை 14ல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும்.இதில் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, துணைத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களை பெற்றோருடன் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும். கூட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்கில் உள்ள படிப்புகள், வேலைவாய்ப்புகள் பற்றி விளக்க வேண்டும். கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்களின் விவரங்களை சி.இ.ஓ., அலுவலகத்திற்கு அனுப்பவும், இக் கூட்டத்திலும் பங்கேற்காத மாணவர்களின் வீடுகளுக்கு மேலாண்மை குழுவினர் சென்று தொழிற்கல்வி குறித்து விளக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us