நம்ம சென்னை செல்பி மையம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
நம்ம சென்னை செல்பி மையம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM
ADDED : ஜூலை 12, 2023 05:02 PM
சென்னை:
மெரினா நம்ம சென்னை செல்பி மையத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.சென்னை, மெரினா கடற்கரையில், நம்ம சென்னை செல்பி மையம் உள்ளது. மெரினாவுக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், கண்டிப்பாக நம்ம சென்னை செல்பி மையத்தில் நின்று, மொபைல் போனில் செல்பி எடுத்துக் கொள்வர்.சென்னையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, மெரினா ராணிமேரி கல்லுாரி எதிரே, 24 லட்சம் ரூபாய் செலவில் இந்த செல்பி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது முதல்வராக இருந்த பழனிசாமி, இந்த செல்பி மையத்தை திறந்து வைத்தார். வெளிநாட்டு சுற்றுலா பயணியரும், இங்கு செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், செல்பி மையத்தில் உள்ள, நம்ம சென்னை எழுத்துகளில் வண்ணம் மங்கலாகி உள்ளது. இதையடுத்து, இதற்கு வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில், நம்ம சென்னை செல்பி மையம் புதுப்பொலிவுடன் மாற உள்ளது.
