தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா

வேளாண் பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா

வேளாண் பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா


UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM

ADDED : ஜூலை 12, 2023 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM ADDED : ஜூலை 12, 2023 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் செயல்படும், திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்ககத்தின் கீழ், பட்டயச்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பல்கலையில் நடந்தது.இப்பல்கலையின் கீழ், வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள உழவர்கள், மகளிர், இளைஞர்கள், பள்ளிப்படிப்பை தொடர இயலாதவர்கள், சுயதொழில் முனைவோர், சிறு தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களுக்கு, ஆன்லைன் மற்றும் தொலைதுார முறையில் பல்வேறு பட்டயபடிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று நடந்தது.இதில், பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:
தொழில்துறை போன்று வேளாண் துறையிலும், பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. வளர்ச்சிக்கு ஏற்ப அப்டேட் செய்துகொள்ள வேண்டியது அவசியம். தொழில்நுட்ப வளர்ச்சிகள், மாற்றங்களுக்கு ஏற்ப, தொலைதுார கல்விமுறையில் பாடத்திட்டங்களை பிரத்யேகமாக வடிவமைத்து பயிற்சி அளிக்க, பல்கலை தயாராகவுள்ளது.தற்போது, உர வியாபாரம் மேற்கொள்ள ஓராண்டு சான்றிதழ் படிப்பை முடித்துள்ளீர்கள். விவசாயிகள் ஏதேனும் பாதிப்பு எனில் முதலில் உரங்களையும், மருந்துகளையும் விற்பனை செய்யும் உங்களைத்தான் அணுகுவார்கள். சரியான வழிகாட்டுதல்களை அவர்களுக்கு அளிக்க வேண்டும். உரம், மருந்து விற்பனை என்பது வியாபாரத்தை தாண்டி, சேவையை அடிப்படையாக கொண்டது என்பதை, புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இதில், பல்வேறு பிரிவுகளில் படிப்பை முடித்த 508 பேருக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பதிவாளர் தமிழ்வேந்தன், ஆராய்ச்சி இயக்குனர் ரவீந்திரன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us