மருத்துவக் கல்வியின் தரம் மேம்படுத்தப்படும்: உ.பி முதல்வர் உத்தரவாதம்
மருத்துவக் கல்வியின் தரம் மேம்படுத்தப்படும்: உ.பி முதல்வர் உத்தரவாதம்
UPDATED : ஜூலை 13, 2023 12:00 AM
ADDED : ஜூலை 13, 2023 09:16 AM
லக்னோ:
மாநிலத்தில் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.இது குறித்து, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 35 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மேலும் 2 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அரசு தயாராக உள்ளது. மாநிலத்தில் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கப்படும். பிரதமர் மோடியின் ஒரு மாவட்டம், ஒரு மருத்துவக் கல்லூரி கனவை நிறைவேற்றுவதற்கான ஒரு படிக்கட்டு.2017ம் ஆண்டுக்கு முன்பு மாநிலத்தில் 12 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. தற்போது மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாநிலத்தில் 16 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. இம்முயற்சி மாநிலத்தில் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மக்கள் அனைவருக்கும் மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
