UPDATED : ஜூலை 13, 2023 12:00 AM
ADDED : ஜூலை 13, 2023 09:57 AM
அ நிறம் | அளவு
சென்னை:
நில அளவை மற்றும் நிலவரி திட்டத் துறைக்கு, டி.என்.பி.எஸ்.சி., வழியே தேர்வு செய்யப்பட்ட 151 நில அளவையாளர்கள் மற்றும் வரைவாளர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.சென்னையில் நில அளவை மற்றும் நில வரித்திட்டம் இயக்குனர் அலுவலகத்தில், நேற்று காலை நடந்த விழாவில், வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன், பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த், வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், நில நிர்வாக ஆணையர் நாகராஜன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
