தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பஜாஜ் பொறியியல் பயிற்சி மையம் சாஸ்த்ரா பல்கலையுடன் ஒப்பந்தம்

பஜாஜ் பொறியியல் பயிற்சி மையம் சாஸ்த்ரா பல்கலையுடன் ஒப்பந்தம்

பஜாஜ் பொறியியல் பயிற்சி மையம் சாஸ்த்ரா பல்கலையுடன் ஒப்பந்தம்


UPDATED : ஜூலை 13, 2023 12:00 AM

ADDED : ஜூலை 13, 2023 11:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 13, 2023 12:00 AM ADDED : ஜூலை 13, 2023 11:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 
பொறியியல் மற்றும் டிப்ளமா பட்டதாரிகள் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு, வளர்ந்து வரும் பணியிட திறன்கள் குறித்து பயிற்றுவிக்க, பெஸ்ட் எனப்படும் பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையம் நிறுவ, தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலைபல்கலையுடன் ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இதுகுறித்து, பஜாஜ் ஆட்டோ நிறுவன நிர்வாகி சுதாகர் கூறியதாவது:வரும் 2026ம் ஆண்டுக்குள் உற்பத்தித் துறையில் 33 லட்சம் திறமையான பணியாளர்கள் தேவை என, வாகன திறன் மேம்பாட்டு கவுன்சில் கணித்துள்ளது. மேலும், இந்தியாவில் 10 சிறந்த மையங்கள் அமைத்து, சிறப்பான தொழிற்பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம். சாஸ்த்ரா - பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையம், இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்கள் உட்பட, 20 புகழ்பெற்ற விற்பனையாளர்களிடம் வாங்கப்பட்ட 160க்கும் மேற்பட்ட மேம்பட்ட பயிற்சி வசதிகளை உள்ளடக்கியது.மெகாட்ரானிக்ஸ், சென்சார் அண்டு கன்ட்ரோல், ரோபாட்டிக்ஸ் அண்டு ஆட்டோமேஷன் மற்றும் தொழில் துறை 4.0 மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகிய, நான்கு வளர்ந்து வரும் பகுதிகளில் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு மையமும் குறைந்தது, 500 மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் வாயிலாக, அடுத்த ஐந்தாண்டுகளில் 25,000 பயிற்சி பெற்ற பட்டதாரிகள் உருவாக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.சாஸ்த்ரா பல்கலை துணை வேந்தர் வைத்தியசுப்பிரமணியம், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு சாஸ்த்ராவில் உள்ள மையம் முதன்மையானதாக மாற்றப்படும் என உறுதியளித்தார். பஜாஜ் ஆட்டோமொபைல் சார்பாக வி.ரமேஷ், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us