தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலங்கைத் தமிழர் கல்விக்கு சென்னைப் பல்கலை ரூ. 2 கோடி

இலங்கைத் தமிழர் கல்விக்கு சென்னைப் பல்கலை ரூ. 2 கோடி

இலங்கைத் தமிழர் கல்விக்கு சென்னைப் பல்கலை ரூ. 2 கோடி


UPDATED : ஜன 08, 2010 12:00 AM

ADDED : ஜன 08, 2010 03:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2010 12:00 AM ADDED : ஜன 08, 2010 03:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம், நிருபர்களிடம் கூறியதாவது:
குடியரசு தினத்தை யொட்டி, சென்னைப் பல்கலைக் கழகம் சார்பில், ‘படித்ததை பிறருக்கு படிக்க கொடுப்போம்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை, ஒரு மாணவருக்கு 50 புத்தகம் என்ற அளவில், புத்தகங்களை திரட்ட திட்டமிட்டுள்ளோம்.


என்.எஸ்.எஸ்., அதிகாரி மணிவண்ணன் மற்றும் முன்னாள் என்.எஸ்.எஸ்., அதிகாரி ராஜா ஹுசைன் தலைமையேற்று நடத்துகின்றனர். இத்திட்டத்தில் அதிக புத்தகங்களை சேகரித்துக் கொடுக்கும் ஐந்து மாணவர்கள், சென்னைப் பல்கலைக் கழகத்தின் 72 துறைகளில், அவர்கள் விரும்பும் துறையில் இலவசமாக படிக்கும் வாய்ப்பை பெறுவர். அதிக புத்தகங்களை சேகரித்து தரும், 10 கல்லூரிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.


இலங்கைத் தமிழர்கள் மற்றும் அகதிகளுக்கு, அவர்கள் வாழும் இடங்களுக்கு சென்று, கல்வி வசதி செய்து தருவது தொடர்பாக, வரும் 18ம் தேதி, கனிமொழி எம்.பி., இலங்கைத் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி, மறுவாழ்வுத்துறை இயக்குனர் கலைவாணன் ஆகியோர் பங்குபெறும், ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.


இலங்கைத் தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்காக, ஜன. 10ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பல்கலைக் கழக பட்ஜெட்டில், இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. வரும் கல்வியாண்டு முதல், இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருப்பர். இவ்வாறு திருவாசகம் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us